Saturday, October 15, 2011

Saturday, October 1, 2011

Indian

 An Indian man walks into the New York City bank and asks for the loan officer. He tells the Loan Officer that he was going to India for some business for 2 weeks and needs to borrow $5,000. The Loan Officer tells him that the bank will need Some form of security for the loan. So the Indian man hands over the keys and the documents of the new Ferrari car parked on the street in front of the bank. The loan officer consults the president of the bank, Produces all the required items and everything check out to be OK. The loan officer agrees to accept the car as a security for the loan. The bank president and the Loan Officer had a good laugh at the Indian For keeping a $750,000 Ferrari as a security and taking only $5,000 has a loan. An employee of the bank then drives the Ferrari Into the banks underground garage and parks it there. Two weeks later the Indian returns and pays $5000 and the interest which comes to it $15.41. Seeing this, loan officer says, “Sir, we are very happy to have your business And this transaction has worked out very nicely, but we are a little puzzled. While you are away, we checked you out and Found out that you were a multi millionaire. What puzzled us was why would you bother to borrow $5000?” The Indian replies "Where else in the New York City can I park my car for 2 weeks and For only $15.41 and expect it to be there when I return". This is a true incident and the Indian is none other than... "VIJAY MALLYA 

Wednesday, April 13, 2011

BALANCE SHEET OF LIFE


BALANCE SHEET OF LIFE

Our Birth is our Opening Balance!
Our Death is our Closing Balance!

Our Prejudiced Views are our Liabilities
Our Creative Ideas are our Assets

Heart is our Current Asset
Soul is our Fixed Asset
Brain is our Fixed Deposit
Thinking is our Current Account

Achievements are our Capital
Character & Morals, our Stock-in-Trade
Friends are our General Reserves
Values & Behaviors are our Goodwill

Patience is our Interest Earned
Love is our Dividend
Children are our Bonus Issues
Education is Brands / Patents

Knowledge is our Investment
Experience is our Premium Account
The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.

Saturday, March 12, 2011

திருவிளையாடல் முழு நீள திரைப்படம் உங்களுக்காக... இதோ !



Sunday, March 6, 2011

Fast Food

"உடம்பார் அழிவின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."


மனுச வாழ்க்கைக்கு ஆதாரமே சாப்பாடு தாங்க அதுல தப்பு பண்ணுனா வாழ்க்கையே நரகமாயிடும்.
.எந்த ஓட்டலுக்கு போனாலும் ஒரே காரம், எண்ணெய், அப்புறம் அரிசி பாதி வெந்து வேகாம இருக்கும்.அதுவும் பாருங்க 'சாகர்'னு முடியுற 'பாஸ்ட் புட்' ஓட்டலுக்கு போனீங்கன்னு வெச்சுக்குங்க, அம்புட்டுதான் ஒரு வாரத்துல நல்ல டாக்டரா பாக்க வேண்டியிருக்கும். அப்டி தான் வந்த ஒரு மாசத்துல எனக்கு உடம்புக்கு முடியாம போச்சு. இந்த கெரகம்புடிச்ச சாப்பாடெல்லாம் சாப்டுட்டு, கம்ம்ங்கஞ்சி,கேப்பை கூழ்னு எங்க ஊர்ல ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய்க்கு விக்குறத நெனச்சா மனசுல சோகம் எல்லையில்லாம வந்து போகுது. அந்த சாப்பாட்டுக்கு தானே அம்புட்டு சொகத்தையும் தொலச்சிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம். அது சரி, அதென்னங்க 'பாஸ்ட் புட்',உக்கார்ந்து நிம்மதியா சாப்புடுறதை விட்டுப்புட்டு நின்னுகிட்டே வெரசா சாப்டுட்டு கிளம்புற சாப்பாட்டுக்கு பேரு 'பாஸ்ட்புட்'. ஒருத்தன் சாப்பாட்டுக்கு ஒரு கால் மணி நேரம் ஒதுக்கி நிம்மதியா உக்காந்து சாப்ட முடியலனா அப்புறம் அவன் சம்பாதிச்சி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அதான் அதுக்கப்புறம், இது வேலைக்காவாதுனு நானே சமையல் பண்ணி சாப்ட ஆரம்பிச்சேன். இப்ப பாருங்க ரெண்டு வேளை சமச்சி சாப்பாடு, ஒரு வேளை 'இயற்கை உணவு'.  கேரட்,முள்ளங்கி,கோஸ்,வெள்ளரிக்காய் இதையெல்லாம் சமைக்காம சாப்பிடுறது. பழம்,தானிய கஞ்சி குடிக்கறது இதெல்லாம் தான் 'இயற்கை உணவு'. ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். பழகிட்டா நீங்க இப்ப காசு குடுத்து வாங்கி சாப்புடுற மசாலா வகையறாவெல்லாம் விஷம்னு தெரியும். ஒரு வேளைக்காவது 'இயற்கை உணவு' சாப்புடுறதுக்கு பழகிக்குங்க.

Thursday, February 24, 2011

சலங்கை ஒலி முழு நீள தமிழ் திரைப்படம் இதோ உங்களுக்காக
செட்டிநாடு அரண்மனை பாருங்ககள்

Saturday, February 12, 2011



ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு ........

 





Saturday, February 5, 2011

மீன் வாங்கலியா மீன் மீனு........

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம். அதிகம் பேர் உண்ணுவது ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களைத்தான் அதிகம் உண்ணுகின்றனர். ஆடு, மாடு, கோழிகள் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இன்று பலர் சர்க்கரை, இருதய, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் எந்த நோயால் தாக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீன் சாப்பிடலாம்.

மீன் இன்று நமது நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களில் மீனுக்கு தனி இடம் உண்டு. மீனை பல வகை உணவுகளாக சாப்பிடுகிறார்கள். ஆனல் அநேகம் பேர் முந்திய நாள் வைத்த மீன் குழம்பில் தான் அதிக சுவை என்பர். அசைவ உணவுகளில் மற்ற எந்ந உணவை விட மீனை மட்டுமே அடுத்த நாள் வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

மீனில் பல வகைகள் உண்டு. ஆற்று மீன் கடல் மீன் என்று இன்று தனித்தனியாக மீனை பிரித்து ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர். கடலோர மாவட்டங்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஐஸ்ல் வைக்கப்பட்ட மீன்தான் கிடைக்கின்றது.

மீன் எல்லா வகையிலும் மனிதனுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது மீன், கருவாடு, மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணை என்ற அனைத்தும் மனிதனின் உணவுப்பொருளாகவே இருக்கின்றது.

மீனைப்பற்றியான ஆராய்ச்சி முடிவுகள்:

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். 

 மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: 

மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழுப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படும் சத்து போதிய விகித கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.
......

Saturday, January 29, 2011

India - the great land

The facts below on India were  published in one of the German magazines which deals with world history.

India never invaded any country in her last 10,000 years of history.

It is the only society in the world which has never known slavery.

India invented the Number System. Zero was invented by Aryabhatta.

The World's first university was established in Takshila in 700 BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century CE was one of the greatest achievements of ancient India in the field of education.

Sanskrit is the mother of all higher languages. Sanskrit is the most precise and therefore suitable language for the computer software - a report in Forbes magazine, July 1987.

Ayurveda is the earliest school of medicine known to humans. Charaka, the father of medicine consolidated Ayurveda 2500 years ago. Today Ayurveda is fast regaining its rightful place in our civilization. It is the only system which takes the holistic view of the person being treated.

Although modern images of India often show poverty and lack of development, India was the richest country on earth until the time of British in the early 17th Century. Christopher Columbus was attracted by her wealth and was looking for route to India when he discovered American continent by mistake.

The art of Navigation was born in the river Sindh 6000 years ago. The very word Navigation is derived from the Sanskrit word NAVGATIH. The word navy is also derived from Sanskrit 'Nou'.

Bhaskaracharya calculated the time taken by the earth to orbit the sun hundreds of years before the astronomer Smart. Time taken by earth to orbit the sun: (5th century) 365.258756484 days.

The value of "pi" was first calculated by Budhayana, and he explained the concept of what is known as the Pythagorean Theorem. He discovered this in the 6th century long before the European mathematicians.

Algebra, trigonometry and calculus came from India. Quadratic equations were propounded by Sridharacharya in the 11th century. The largest numbers the Greeks and the Romans used were 106 whereas Hindus used numbers as big as 10**53(10 to the power of 53) with specific names as early as 5000 BCE during the Vedic period. Even today, the largest used
number is Tera: 10**12(10 to the power of 12).

According to the Gemological Institute of America, up until 1896, India was the only source for diamonds to the world. USA based IEEE has proved what has been a century old suspicion in the world scientific community that the pioneer of wireless communication was Prof Jagdeesh Bose and not Marconi.

The earliest reservoir and dam for irrigation was built in Saurashtra. According to Saka King Rudradaman I of 150 CE a beautiful lake aptly called 'Sudarshana' was constructed on the hills of aivataka during Chandragupta Maurya's time.

Chess (Shataranja or AshtaPada) was invented in India.

Sushruta is the father of surgery. 2600 years ago he and health scientists of his time conducted complicated surgeries like cesareans, cataract, artificial limbs, fractures, urinary stones and even plastic surgery and brain surgery. Usage of anesthesia was well known in ancient India. Over 125 surgical equipments were used. Deep knowledge of anatomy, physiology, etiology, embryology, digestion, metabolism, genetics and immunity is also found in many texts.
When many cultures were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley (Indus Valley Civilization)

The place value system, the decimal system was developed in India in 100 BC.

Friday, January 28, 2011

தமிழன் வாழ்ந்த முறை

கணித எண்கள்

====================================

௧ = 1 = ஒன்று
௨ = 2
௩ = 3
௪ = 4 (சதுர், சதுரம் = நான்கு)
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8 (அஷ்டம் - எட்டு)
௯ = 9
௰ = 10 = பத்து (தசம் - மலயாலத்தில் ௰ என்பது த ஆகும்)
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100 = நூறு
௲ = 1000 = ஆயிரம்
௰௲ = 10000 = பத்தாயிரம்
௱௲ = 100000 = நூறாயிரம்
௰௱௲ = 1000000 = பத்துநூறாயிரம்
௱௱௲ = 10,000,000 = கோடி
௰௱௱௲ = 100,000,000 = அற்புதம்
௱௱௱௲ = 1000,000,000 = நிகர்புதம்
௲௱௱௲ = 10,000,000,000 = கும்பம்
௰௲௱௱௲ = 100,000,000,000 = கணம்
௱௲௱௱௲ = 1,000,000,000,000 = கற்பம்
10,000,000,000,000 = நிகற்பம்
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
10000000000000000000 = பரார்த்தம்
100000000000000000000 = பூரியம்
1000000000000000000000 = முக்கோடி

10000000000000000000000 = மஹாயுகம்

இறங்கு முக கணித எண்கள்
===============================
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு - ≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
நீட்டல் அளவைகள்
================================
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன் நிறுத்தல்

===================================
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

=======================================
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

====================================
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

நிறுத்தல் அளவு

===============================
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

பொழுதுகள்

=====================
ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. ஏற்பாடு
5. மாலை
6. யாமம்

பெரும் பொழுதுகள்

========================================
ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,
1. இளவேனில் (சித்திரை, வைகாசி )
2. முதுவேனில் (ஆனி, ஆடி)
3. கார் (ஆவணி, புரட்டாதி)
4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)
5. முன்பனி ( மார்கழி, தை)
6. பின்பனி ( மாசி, பங்குனி)

காலம் தெரிப்பளவு

======================
2 கண்ணிமை - 1 நொடி
2 கை நொடி - 1 மாத்திரை
2 மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 ஓரை
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்

இதர கால அளவைகள்

=========================
1 நாழிகை = 24 நிமிடம்
2.5 நாழிகை = 1 மணி
3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
7.5 நாழிகை = 1 ஜாமம்
ஜாமம் = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது / பருவம்
3 ருது / பருவம் = 1 அயனம்
2 அயனம் = 1 வருடம்

கால் அளவு -வேறு

========================
1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
1 விநாழிகை = 60 லிப்தம்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 60 பரா
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பரா
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

பிறைகள்

====================
திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை,
1. வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)
2. தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)

 நாட்கள் வாரம்

===================
1. ஞாயிறு (சூரியன்)
2. திங்கள் (சந்திரன்)
3. செவ்வாய்
4. புதன்
5. வியாழன் (குரு)
6. வெள்ளி
7. சனி
இவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என அப்பெயர் அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது.

திதிகள்

===================
பிரதமை
த்விதை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
த்வாதசி
த்ரோதசி
சதுர்தசி
பௌர்ணமி (அ) அமாவாசை

மாதங்கள்

====================
சித்திரை = மேடம் = மேழம் = 30 நாள்
வைகாசி = இடவம் = விடை = 31 நாள்
ஆனி = மிதுனம் = ஆடவை = 31 நாள்
ஆடி = கற்கடகம் = கடகம = 31 நாள்
ஆவணி = சிங்கம் = மடங்கல் = 31 நாள்
புரட்டாசி = கன்னி = கன்னி = 30 நாள்
ஐப்பசி = துலாம் = துலை = 29 நாள்
கார்த்திகை = விருச்சிகம் = நளி = 29 நாள்
மார்கழி = தனுசு = சிலை = 29 நாள்
தை = மகரம் = சுறவம் = 29 நாள்
மாசி = கும்பம் = கும்பம் = 29 நாள்
பங்குனி = மீனம் = மீனம் = 30 நாள்

யுகங்கள்

============================
1 கற்பம் 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம் = 4 யுகங்கள்
4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம் = 3 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள்
கலியுகம் = 1 x 43,20,000 ஆண்டுகள்
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
1 ஆண்டு 12 மாதங்கள்
(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன, பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.
இதை எல்லாம் படித்து என்ன தோன்றுகிறது ?
எப்படி வாழ்ந்த தமிழன் இப்படி ஆயிட்டனே ? என்று நினைக்கத் தோன்றுகிறதா?
ஹூம் ! என்ன செய்வது ?

Wednesday, January 26, 2011

குட்டிக் கதை - ரிஸ்க்

ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 20000 ரூபாய் ஆகும்”
அதற்கு கணவன் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம். 20000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”
போலிஸ்காரருக்கு ஆச்சரியம். “உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்கிறார்.
அதற்கு பதில் “2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

Tuesday, January 25, 2011

திருவிளையாடல் ....

சேர்ந்தே இருப்பது?
ஏர்செல்லும் நெட்வொர்க் பிஸியும்

சேராதிருப்பது?
ரிலைன்ஸ் 2 பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்

செய்யக்கூடாதது?
செல் 2 லேண்ட் லைன் கால்

செய்யவேண்டியது?
கஸ்டமர் கால்

செல்லுக்கு?
நோக்கியா

பில்லுக்கு?
பிஎஸ்என்எல்

நெட்வொர்க்குக்கு?
ரிலையன்ஸ்

சைஸ்க்கு?
மோட்ரோலா

கலருக்கு?
எல்ஜி

கேமராவுக்கு ?
சாம்சங்

பாட்டுக்கு?
சோனிஎரிக்சன்

எஸ்எம்எஸ்க்கு?
ஏர்டெல்

இலவசத்துக்கு?
ஏர்செல்

ரீசார்ஜ்க்கு?
வோடாபோன்

ரேட்க்கு?
டாடா டோகோமா

மெசேஜ் அனுப்ப?
நான்

படிக்க?
நீ

HOW TO IMPROVE YOUR LIFE



Personality:

1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't over do; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn.
     The lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.

Community:

15. Call your family often
16. Each day give something good to others
17. Forgive everyone for everything
18. Spend time with people over the age of 70 & under the age of 6
19. Try to make at least three people smile each day
20. What other people think of you is none of your business
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life:

22. Put GOD first in anything and everything that you think, say and do.

23. GOD heals everything
24. Do the right things
25. However good or bad a situation is, it will change
26. No matter how you feel, get up, dress up and show up
27. The best is yet to come
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful
29. When you awake alive in the morning, thank GOD for it
30. If you know GOD you will always be happy. So, be happy.

Monday, January 24, 2011

குட்டி உண்மைக் கதை

ஏழை ஒருவர் மீன் பிடித்து வீட்டுக்குக் கொண்டுசென்றார்
அதை சமைக்க வீட்டில் கரண்ட் இல்லை , காஸ் இல்லை, எண்ணெய் இல்லை ,
வெங்காயம் இல்லை ,
அதனால் அவர் மீனை மறுபடியும் கொண்டுபோய் ஆற்றில் விட்டு விடுகிறார்
அதற்கு அந்த மீன் சந்தோஷமாக சொல்லுச்சு , "உயிர் காக்கும் திட்டம் கொண்டுவந்த கலைஞருக்கு நன்றி! "- என்று.

Sunday, January 23, 2011

கண்ணுக்கு பயிற்சி


கம்ப்யூட்டர் இல் அதிக நேரம் வேலை பார்பவர்களுக்கு ,
இப்படி தினமும் கண்ணுக்கு பயிற்சி தேவை
வேடிக்கை இல்லை உண்மை !

Cinema

இதைப் படித்துப் பாருங்கள் !

 
உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை

 
 
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான  கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால்  அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
 
கரைக்கு வந்த அவன்  அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
 
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
             
 ----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

welcome

வணக்கம்
புதியதோர் உலகம் செய்வோம்
விதியினை வெல்வோம்- நல்ல
மதியின் பயனை யாவர்க்கும் சொல்வோம்
சிந்தனைகள் பகிர்ந்து கொள்வோம்
வித்தைகள் கற்போம்
விளையாடி மகிழ்வோம்
Face book கிற்குப்பதிலாக
புதியதோர் உலகத்திற்கு
தினமும் வாரீர் !!
E - Mail  ற்கு பதிலாக
புதியதோர் உலகத்தில்  உங்கள் எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்வீர் !!
இது உங்கள் பக்கம்
இது உங்கள் உலகம்
இது உங்கள் வீடு
இதற்கு விண்ணும் எல்லையில்லை
மண்ணும் எல்லையில்லை
இதில் வரப்போகும் எண்ணங்களோ
கடலை விட ஆழமும் , மலையின் சிகரத்தை விட  உயரமும் கொண்டவை
இது ஒரு நூறு பேர்களின் சிற்பக்கூடம்
சிந்தனைச் சிற்பிகளே  வாரீர்
உங்கள் சிந்தனை முத்துக்கள் இங்கே மாலையாகத் தொடுக்கப்படும்
இந்த உலகம் என் இனிய நண்பர்கள் கூடப்போகும் கச்சேரிக்கூடம்
இது ஒரு நூறு மலர்த் தோட்டத்தின் பூக்கூடை
உங்கள் எண்ணங்கள்  இங்கே புதிது புதிதாகப் பூத்துக் குலுங்கட்டும்
இந்த உலகம் ஒரு தடையற்ற நீரோடை
 உங்கள் எண்ணங்கள்  இங்கே வற்றாத ஊற்றாகட்டும்;
இது ஒரு தேன் கூடு ;
தேனீக்களே, தேனை விடவும் சுவையானது உங்கள் எண்ணங்கள் என்பதை
புதியதோர் உலகத்திலே சத்தியமாக்குங்கள்
வாருங்கள்!!  வாருங்கள் !! உங்களை மனம் திறந்து வரவேற்கிறேன்
இந்த இணையதளத்தின் வலைப்பூவை
உங்களுக்குச் சமர்ப்பிக்கும் 
அன்பன்
இராமநாதன்