Jokes

Teacher:          : Vaasamulla Rojapoo Vaadipollama?  - change to indirect speach
Student            : " Vaadi Sarjoja  Odipollama"

=========================================================

என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில
நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
Sick நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு
ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

=====================================================

ஹலோ யார் பேசறது?

நான் செல்லம்மா பேசறேன்?

நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்….
யாருனு சொல்லும்மா!

=======================================================

மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையே?

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
=========================================================

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது,
தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது,
ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா
ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா
கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

=========================================================

அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ?

எப்படி ?

வாவ் வாவ்னுதான்
Big smile
======================================================
செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட
செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .

ஏன் ?

இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்

=====================================================

மிஸ் உமா வேலைக்கு மனு பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.
Salary expected என்கிற காலத்தில் என்ன எழுதுவது என்று
நெடு நேரம் யோசித்து கடைசியில்,

Yes என்று எழுதினார் Big smile
===================================================

3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை
மட்டும்
ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்?

அது வழியனுப்ப வந்தது.
===================================================
பரிட்சையில் பாஸ் பண்ணிவிட்டால்.........

அப்பா - என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா...
ஆசிரியர் - என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..
காதலி - ஐ லவ் யு டா..
நண்பன் - மச்சி. ட்ரீட்

பரிட்சையில் தோற்றுவிட்டால்........

அப்பா - உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா
ஆசிரியர் - நீயெல்லாம் மாடுமேய்க்கத்தாண்டா லாயக்கு
காதலி - உன்னை போய் காதலிச்சேனே. என் கூட பேசாத
நண்பன் - மச்சி. ட்ரீட்

===================================================

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு
எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .
===================================================

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
 ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
===================================================

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! 
=====================================================
டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
=====================================================

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

==========================================
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
============================================

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
==============================================

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
=============================================

வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
=========================================

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
================================================

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
============================================

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
=============================================

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
=============================================

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
=============================================

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
============================================

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
===============================================
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
===============================================

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
================================================

ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....
===============================================
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
==============================================

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
===============================================

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....
 ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
===========================================
உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா?
மதிப்பிற்குரிய ஐயா,
உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்
மிக்க நன்றி.
===========================================
* டீ மாஸ்டர் என்னதான் "லைட்டா" டீ போட்டாலும்,
அதுல இருந்தாலும் வெளிச்சம் வராது

* பவர் கிளாசை எவ்ளோ நேரம் பிரிட்ஜ்ல வச்சாலும்
 அது கூலிங் கிளாஸ் ஆகாது

* ரயில் என்னதான் வேகமாப் போனாலும்
கடைசி பெட்டி கடைசியாத்தான் வரும்..
==========================================================
உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம்.
 ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?

* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி
   (மொத்த டிக்கட் ஏழு)

* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே
   ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு
   (இது காதலா கள்ளக்காதலா?)

* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல             (அவ்வ்வ்வவ்வ்வ்)

* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

தாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..
======================================================
உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள்.
விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு.
 ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது..
எங்குட்டு உருப்புடப் போகுது?"
==================================================
பத்து வருஷத்துக்கு முன்னாடி..

ஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா

இன்னைக்கு..
ஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா
அதனாலத்தான் சொல்றேன்..

வாழ்க்கை ஒரு வட்டம்டா
==================================================
இவ்வளவு சொல்லிட்டு "அவரப்" பத்தி சொல்லலைனா எப்படி?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே காமெடிதான்.
* "கில்லி"ன்னு சொல்லிக்கிட்டு ஹீரோ கபடி ஆடுவாரு
* "போக்கிரி"ல போலிஸ்னு சொல்லிபுட்டு கடைசில கூர்க்காவ காமிப்பாங்க
* "அழகிய தமிழ்மகன்"னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அப்படி யாரையும் கண்ணுல காட்டவே இல்ல
* இது கூட பரவாயில்லைங்க.. "குருவி"ன்னு சொன்னாங்க.. ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல
* "வேட்டைக்காரன்"னு சொல்லி ஒரு ஈத்தர ஆட்டோக்காரனக் காமிக்குறாங்க
* கடைசி கொடுமை.. "சுறா"ன்னு சொல்லி
கருவாடக் காமிக்குறாங்க..
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

குறிப்பு : நெட்டில் படித்தது.
========================================================

எனக்குக் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. நல்லா விம் போட்டு வெளக்குனீங்கன்னா வசதியா இருக்கும்.

-> தண்ணிப்பாம்புக்கு ஜல்ப்பு பிடிக்குமா?

-> கருப்பா இருக்குற எருமைமாடு எப்படி வெள்ளக் கலர்ல பால் கொடுக்குது?

-> சரக்கு ரயில் தள்ளாடுமா?

-> பிராந்திய ஹாட் டிரின்க்னு சொல்றாங்களே.. அதை அப்படியே குடிக்கணுமா இல்ல ஆத்திக் குடிக்கணுமா?

-> ஒல்லியா இருக்குற பின்ன (pin) ஏன் குண்டூசின்னு சொல்றோம்?

-> கொசு கொட்டாவி விடுமா?

- இவண்
இப்படியெல்லாம் யோசிச்சாலாவது பெரிய விஞ்ஞானி ஆக
 முடியுதான்னு முயற்சிப்போர் சங்கம். Trichy Tamilnadu
================================================
அப்பா : அடடே என் பையா.. ஓடிவா வாவாவாவாவா.
உம்ம்ம்ம்ம்ம்மா.......
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட கேசரி கிண்டித்தரச்சொல்லவா?

பையன் : வேண்டாம்பா. நான் இனி ஒழுங்கா படிக்கிறேன்பா..
அம்மா : Angry
=================================================

ஏண்டா நடு ரோட்ல உக்காந்து படிக்கிற?
நான் பப்ளிக் எக்ஸாம்க்கு படிக்கிறேன்
நீ ஏண்டா வாசல் படில உக்காந்து படிக்கிற?
நான் எண்டரண்ஸ் எக்ஸாம்க்கு படிக்கிறேன்
ஏண்டா நீ கிணத்துக்குள்ள உக்காந்து உக்காந்து படிக்கிற?
அப்பா தான் ஆழமா படிக்கச்சொன்னார்
================================================

ஏம்பா இன்னைக்கு ஆபீஸ் இல்லையா?
அடப்போப்பா, சஸ்பண்ட் பண்ணிட்டாங்கபா
ஏண்டா?
டை கட்டிட்டு வரச்சொன்னாங்க. டை கட்டிட்டுப்போனேன்
அடப்பாவி. டை கட்டிட்டு போனதுக்கா சஸ்பண்ட் பண்ணாங்க?
ஆமா. டை மட்டும் கட்டிட்டுப்போனேன்
Sad
================================================
காதலன் - ஏண்டி உன்கிட்ட கட்டின புடவையோடு வான்னு சொன்னேன்ல. ஏன் வரல்ல?
காதலி - சாரிங்க, நான் அன்னைக்கு சுடிதார் போட்டிருந்தேன்.
=================================================

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள். ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு தீர்மானமா சொல்லிட்டாங்க. கடைசியா ஜட்ஜ் கேட்டார்.
"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."
ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.
"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிறேன்.."
====================================================

காதலர் தினம் இருப்பதால்தான் என்னமோ, அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..
================================================

பெண்களின் கண் அசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால் ஒரு உண்மையான ஆண் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.
"மச்சி.. டக்குன்னு திரும்பாத.. ஒரு சூப்பர் பிகரு நம்மள கிராஸ் பண்ணிப் போகுது.."
===================================================
மயிலுக்கும் கிளிக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?
மயில் தேசியப்பறவை..
கிளி ஜோசியப்பறவை...
ஓகே ஓகே நோ டென்ஷன்.. இந்த மாதிரியான அறிவாளி விஷயமெல்லாம் எனக்குத்தான் தெரியுமாக்கும்..
====================================================
1980 - ஐ டி பி ஐ (IDBI) பேங்க்ல அம்பானிக்கு லோன் தர முடியாதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அதே பேங்கை நாம வாங்கலாமான்னு அம்பானி யோசிச்சுக்கிட்டு இருக்காரு. மனுஷன் நினைச்சா சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைன்னு இதுல இருந்து தெரியுது. அதே மாதிரி..
இப்போ.. 2011 - எனக்கு கனரா பேங்க்ல லோன் தர மாட்டேன்னு சொல்லிடாங்க. அதனால கண்டிப்பா 2025ல..
ரொம்ப யோசிக்காதீங்க. நான் மறுபடியும் லோன் தான் அப்ளை பண்ணப் போறேன். ஏன்னா.. கனரா பேங்க் கவர்மெண்டு பேங்க். விலைக்குக் கேட்டா கொன்டேபுடுவாங்க..
=================================================

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..
================================================

டாக்டர் எதுக்கு இவ்வளவு மாத்திரை எழுதித் தந்திருக்கீங்க..?
doctor எல்லாத்தையும் ஒழுங்கா சாப்பிடணும் - ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்
==========================================
பையன்: அப்பா, ஒரு பிகரு என்ன அடிச்சுருச்சு பா...
அப்பா: மிஸ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே....
பையன்: அடிச்சதே மிஸ்தாம்ப்பா...
அப்பா: மிஸ் லாம் பிகரு னு சொல்ல கூடாது. அவங்க‌ உனக்கு அம்மா மாதிரி.
பையன்: சைக்கிள் கேப் ல நீ ரூட்டு விடாதே பா...§
Laughing out loud
===============================================

கல்யாணத்துக்கப்புறம் நடிப்பீங்களா மேடம்?
பின்ன... நல்ல மனைவியா 'நடிச்சு'த்தானே ஆகணும்!''
==========================================

ஏண்டா குடும்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
வெளியில விலைவாசி ஏறிப்போச்சுங்கையா, வயிறாரச் சாப்பிட முடியலைங்கையா
அதான் சாமீ
==========================================

பிறந்த குழந்தை : ஹலோ டாக்டர்... எஸ்எம்எஸ் பேக் போட்டிருக்கியா
doctor ஆமா ஏன்?
நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு கடவுளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பனும்.. அப்புறம் முக்கியமா என்னோட கேர்ள் பிரண்ட சீக்கிரமா அனுப்பிவையின்னு சொல்லணும்.....

==============================================

உமா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு"
பாமா : "ஏன்?"
உமா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்".
Big smile Big smile Big smile
=========================================

ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?
நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
=======================================

நம்ம காதல் புனிதமானது சிவா !'
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
Laughing out loud
============================================

காதலன்: நீலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா கண்ணே...

காத‌லி : ‌தினமு‌ம் இ‌ந்த ‌நீல‌க்கடல‌‌த்தானே‌க் கா‌ண்‌பி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க.. ஒரு நாளைக்காவது நிலக்கடலையை காட்டக்கூடாதா... கண்ணாளா

============================================

காவ‌ல்‌நிலைய‌ம்
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து
காணல! புகார் கொடு‌க்கணு‌ம்..

அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்..
 முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க...

எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்..
‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர் ‌கி‌ட்ட பேச‌ச் சொ‌ல்‌றீ‌ங்க?

அவரோட பைய‌ன‌க் காணோ‌ம்னு இ‌ப்போ‌த்தா‌ன் புகா‌ர்
 கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன்.

Big smile
======================================================

ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
===============================================
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி
அப்படின்னா என்னங்க..?

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
Sexy
================================================

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???

மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..

===============================================
நீயில்லை என்றால்
நானில்லை என்பதல்ல நட்பு
யாருமில்லை என்றாலும்
நானிருக்கிறேன் உனக்காக என்பதுவே நட்பு...
===============================================

டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
===============================================
ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:

"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"

"ஐந்து"

"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"

"எட்டு"

"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."

"ஜேக்கர்"

"???!!!!!?"
===============================================
போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?

ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு
ஏதோ சொல்லிட்டு போனான்..

போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
=================================================

இந்திய அரசு ஏன் இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கவில்லை?

ஏனெனில், ஒருவன் ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படக்கூடாது.
================================================
பூக்கள் மலரட்டும்
உன் புன்னகை பார்த்து
கவிதைகள் மலரட்டும்
உன் குரல் கேட்டு
நிலவு மலரட்டும்
உன் முகம் பார்த்து
நட்பு மலரட்டும்
நம்மைப் பார்த்து
============================================

என் இதயமே!

உன்னை நான் பார்த்ததும் இல்லை;
என்னை நீ பார்த்ததும் இல்லை
பின் ஏன் நான் வாழ நீ துடிக்கிறாய்...?....
===========================================
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென்
ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்..
அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...

பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????

நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.
???
Davie
=======================================

மரணமே என்ராலும் அவளை மறக்காத மனம் வேண்டும்.
மீண்டும் ஜனனம் என்ராலும் அவள் வேண்டும்..
உறவாக அல்ல  உயிராக.......

-- அவள் தான் அம்மா..!
==================================================

வியர்வைத்துளிகளும்
கண்ணீர்த்துளிகளும்
உப்பாக இருக்கலாம்.. ஆனால்
அவைகள் தான் வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்...

================================================

திருட்டு வீ.சி.டி.-வியாபாரிகல்லாம் சேர்ந்து அந்த நடிகர்
வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்காங்களே...எதுக்கு?
அதுவா அந்த நடிகர் நடிச்ச படத்த திருட்டு வீ.சி.டி-யா நிறைய காப்பி போட்டிருந்தாங்களாம். விக்காம நட்டம் வந்துடுச்சாம்..அதான் நடிகர்ட்ட நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம் இருக்காங்க...
==============================================
சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...

==============================================