ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா -குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா
==================================================
Please clik the titles for the links......
Please clik the titles for the links......
1) குழந்தைகளுக்குத் தமிழ் (Children rhymes and stories and math)
2) தேதித்தாள் (for those residing outside India)
3).தமிழ்ச் சொல்லாற்றல்ப் பயிற்சி
4). முதல் நிலைச் சான்றிதழ் கல்வி
5). இடை நிலைச் சான்றிதழ் கல்வி
6). மேல் நிலைச் சான்றிதழ் கல்வி
7).முதல் நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
8).இடை நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
9).மேல் நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
தமிழ் கற்போம்
Specially designed for Mr.Vineeth
பாடம் – 1 : முன்னுரை
பாடம் – 2 : வாய்மொழிப் பயிற்சி – 1
2) தேதித்தாள் (for those residing outside India)
3).தமிழ்ச் சொல்லாற்றல்ப் பயிற்சி
4). முதல் நிலைச் சான்றிதழ் கல்வி
5). இடை நிலைச் சான்றிதழ் கல்வி
6). மேல் நிலைச் சான்றிதழ் கல்வி
7).முதல் நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
8).இடை நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
9).மேல் நிலை உயர்ச் சான்றிதழ் கல்வி
தமிழ் கற்போம்
Specially designed for Mr.Vineeth
பாடம் – 1 : முன்னுரை
பாடம் – 2 : வாய்மொழிப் பயிற்சி – 1
பாடம் – 25 : ‘ஒ’, ‘ஓ’, ‘ஔ’, ‘ஐ’ – எழுத்து அறிமுகம் மற்றும் பயிற்சி
டூரிஸ்ட்( பயணியர்) தமிழ்
Engish Nursery Rhymes
Fun Math lessons for children
AAAmath lessons for kindergarden to 8th standerd
Games for kutties
Specially designed for Miss Bharthi
குழந்தை கல்வி ( இந்தச் சுட்டியை சொடுக்கி சின்னஞ் சிறுவர் சிறுமி களுக்கு
கல்வி புகட்டுங்கள் ) Kids Learning குழந்தை கல்வி
டூரிஸ்ட்( பயணியர்) தமிழ்
Engish Nursery Rhymes
Fun Math lessons for children
AAAmath lessons for kindergarden to 8th standerd
Games for kutties
Specially designed for Miss Bharthi
குழந்தை கல்வி ( இந்தச் சுட்டியை சொடுக்கி சின்னஞ் சிறுவர் சிறுமி களுக்கு
கல்வி புகட்டுங்கள் ) Kids Learning குழந்தை கல்வி