Sunday, March 6, 2011

Fast Food

"உடம்பார் அழிவின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."


மனுச வாழ்க்கைக்கு ஆதாரமே சாப்பாடு தாங்க அதுல தப்பு பண்ணுனா வாழ்க்கையே நரகமாயிடும்.
.எந்த ஓட்டலுக்கு போனாலும் ஒரே காரம், எண்ணெய், அப்புறம் அரிசி பாதி வெந்து வேகாம இருக்கும்.அதுவும் பாருங்க 'சாகர்'னு முடியுற 'பாஸ்ட் புட்' ஓட்டலுக்கு போனீங்கன்னு வெச்சுக்குங்க, அம்புட்டுதான் ஒரு வாரத்துல நல்ல டாக்டரா பாக்க வேண்டியிருக்கும். அப்டி தான் வந்த ஒரு மாசத்துல எனக்கு உடம்புக்கு முடியாம போச்சு. இந்த கெரகம்புடிச்ச சாப்பாடெல்லாம் சாப்டுட்டு, கம்ம்ங்கஞ்சி,கேப்பை கூழ்னு எங்க ஊர்ல ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய்க்கு விக்குறத நெனச்சா மனசுல சோகம் எல்லையில்லாம வந்து போகுது. அந்த சாப்பாட்டுக்கு தானே அம்புட்டு சொகத்தையும் தொலச்சிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம். அது சரி, அதென்னங்க 'பாஸ்ட் புட்',உக்கார்ந்து நிம்மதியா சாப்புடுறதை விட்டுப்புட்டு நின்னுகிட்டே வெரசா சாப்டுட்டு கிளம்புற சாப்பாட்டுக்கு பேரு 'பாஸ்ட்புட்'. ஒருத்தன் சாப்பாட்டுக்கு ஒரு கால் மணி நேரம் ஒதுக்கி நிம்மதியா உக்காந்து சாப்ட முடியலனா அப்புறம் அவன் சம்பாதிச்சி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அதான் அதுக்கப்புறம், இது வேலைக்காவாதுனு நானே சமையல் பண்ணி சாப்ட ஆரம்பிச்சேன். இப்ப பாருங்க ரெண்டு வேளை சமச்சி சாப்பாடு, ஒரு வேளை 'இயற்கை உணவு'.  கேரட்,முள்ளங்கி,கோஸ்,வெள்ளரிக்காய் இதையெல்லாம் சமைக்காம சாப்பிடுறது. பழம்,தானிய கஞ்சி குடிக்கறது இதெல்லாம் தான் 'இயற்கை உணவு'. ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். பழகிட்டா நீங்க இப்ப காசு குடுத்து வாங்கி சாப்புடுற மசாலா வகையறாவெல்லாம் விஷம்னு தெரியும். ஒரு வேளைக்காவது 'இயற்கை உணவு' சாப்புடுறதுக்கு பழகிக்குங்க.

No comments:

Post a Comment