Thursday, March 28, 2013

இலட்சிய இலக்குகள் ........ஒரு கூடை !


இலட்சிய  இலக்குகள் ........ஒரு கூடை !  
  

Every Man dies -Not every man really lives .....(William Ross )

உங்கள் வாழ்கையில் செய்து முடிக்க எண்ணும் ஒரு நூறு காரியங்களை பட்டியல் இடுங்கள் . என்ன கனவுகளை அடைய விரும்புகிறீர்கள் ?... என்ன இலட்சியங்கள்  உங்களை உந்துகின்றன? .. என்ன மாதிரியான அனுபவங்களுக்கு ஆசை படுகிறீர்கள் ? இன்னும் சுருக்கமாக கேட்டால்  எத்தகைய முடிவை நோக்கி திட்டமிட்டு நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ? கடந்த  3 மாதங்களில் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனை என்று எதை சொல்லுவீர்கள் ? அடுத்த 3 மாதங்களுக்கு உங்கள் இலக்கு எதுவாக இருக்கிறது ?

இலட்சியம் அமைத்துக் கொள்வதென்பது , உங்கள் செயல் திறன் , வேலை , உடல் ஆரோக்கியம் என்ற சில சமூக காரணிகளின் அடிப்படியில் மட்டுமின்றி
உங்கள் சின்ன சின்ன ஆசைகளாகவும் கூட இருக்கலாம் . இப்படி பட்டியலிட்டு வாழும் வாழ்க்கை , நமக்கு என்னவெல்லாம் கிடைக்க விருக்கிறது , என்னவெல்லாம் கிடைக்க கூடும் என்ற  தணியாத ஆர்வத்தை உள்ளடக்கி இருக்கும் .இந்த உலகில் நாம் வாழும் காலம் சிறியது . அதில் அர்தமற்ற செயல்களுக்கு நேரம் செலவிடாமல் ,ஒவ்வொரு கணங்களையும் பயனுள்ளதாக  ஆக்கிக் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஓர் ஞானி இன்னும் போதித்துக் கொண்டிருக்கிறார் .  Live your life to the fullest extend, by maximizing  every moment of your existence.

உங்கள் இலட்சியப் பட்டியல் தயாரிக்க ஆரம்பிக்கும் முன்னர் ,நீங்கள் என்னுடைய இலட்சியப் பட்டியலை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள் அல்லவா?.....



இதோ உங்களுக்காக !

1) புகைப்படம் ஒரு கோடி
2) வங்கித் துறையில் விருது
3) வெளிநாட்டிற்கு விமானத்தில் பறந்து செல்ல
4)  கப்பலில் செல்ல
5) என் உடல்  எடையை குறைக்க
6) அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்க
7) ஐரோப்பா  செல்ல
8) eiffel tower - இரவில் பார்க்க வேண்டும்
9) நயாகரா நீர் வீழ்ச்சியின் சாரலில் ஒரு நாள் முழுக்க நனைய வேண்டும்
10) இந்தியா  முழுக்க சுற்றவேண்டும்
11) பிள்ளைகள் மூவரையும் டாக்டர்கள் ஆக்க வேண்டும்
12) பிள்ளைகளை வெளி  நாட்டுக்கு அனுப்ப
13) கணணி (கம்ப்யூட்டர் ) பயில
14)சொந்த மாக கனவு இல்லம்
15)சொந்த  கார் அதுவும் நானே ஒட்டவேண்டும்
16) பங்கு சந்தை  நுணுக்கங்களை கற்றுக்கொள்ள
17) மாதம் 6 இலக்கத்தில் வருமானம் தேட
18) என் பெயரனை Airtel சூப்பர் சிங்கரில் பாடவைக்க
19) ரோமாபுரியில் சென்று பழமை சின்னங்களை பார்க்க
20) switcher-land  செல்ல
21) பேரன் பேத்தி களோடு disneyland செல்ல
22) ஒட்டகத்தின் மீது சவாரி செய்ய
23) பின்லாந்தில் பேத்தியுடன் பட்டம் பறக்க விட்டு விளையாட
24) Pisa tower  சாய்ந்த கோபுரத்தின் புல் வெளியில் படுத்துக்கொண்டே கோபுரத்தை ரசிக்க
25)பின்லாந்தில் பனியில் தன்னந் தனியாக வெகு தூரம் நடக்க
26) நண்பர்கள் கஷ்ட பட்டால் முடிந்த உதவி செய்ய
27) ஹெலிகாப்டரில் பயணம் செய்ய
28)  நீச்சல் பழக
29) காஷ்மீர் படகு வீட்டில் இரண்டு நாள் தங்க
30) தாஜ்மஹால் பார்க்க
31) லண்டனில் ஒரு வாரம் தங்க
32) சிங்கப்பூரில் ஷாப்பிங் செய்ய
33) துபாய் நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் தங்க
34) யானை மீது  சவாரி செய்ய
35) அமெரிக்காவில் பெயர்த்தி பரத நாட்டிய  அரங்கேற்றம் பார்க்க
36) விமரிசையாக சஷ்டியப்த பூர்த்தி  செய்து கொள்ள
37) மூட நம்பிக்கை களுக்கு ஆளாகாமல் இருக்க
38)   பகுத்தறிவற்ற கூட்டத்திலிருந்து விலக 
39) குல்மார்க் பனி மலை மீது ஏற
40) கனடா CN Towers மீது ஏறி பார்க்க
41) கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை தொட்டுப் பார்க்க
42)USA  Empire state கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பார்க்க
43) New york  statue  of  Liberty சென்று பார்க்க
44) ஊட்டியில் பங்களா வாங்க
45)San Antonio  river walk செல்ல
46)sea world  பார்க்க
47) HOT - Air  பலூனில் உயரத்தில் பறந்திட
48)washington  Monument மீது ஏறிப் பார்க்க
49)white House tour சென்று பார்க்க
50)காசி யாத்திரை செல்ல
51) அலகபாத்  திரிவேணி சங்கமத்தில் தீர்த்த மாட
52) கவிதைகள் இயற்ற
53) KFC  சிக்கன் ருசித்து சாப்பிட
54)  கடைசி வரை என் பற்கள் விழாமல் பாதுகாக்க
55)  பொறுமை வளர்த்து கோபத்தை தவிர்க்க
56)  மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக்கொள்ள
57) கடனே இல்லாமல் இருக்க (debt free )
58) கண்  தானம் செய்ய
59) குறைந்தது 5 மொழி களாவது பேச வேண்டும்
60) குற்றால நீர்வீழ்ச்சியில் குளிக்க
61) colosseum in Rome  பார்க்க
62) டெல்லி காந்தி சமாதி பார்க்க
63) நேரத்தை நிர்வகிக்க பழக வேண்டும்
64)"NO "  சொல்ல தெரிய வேண்டும்
65) warren Buffet சந்திக்க வேண்டும்
66) பங்கு சந்தையில் முதலீடு செய்ய
67)"Blog " ஆரம்பிக்க
68) Lake Tahoo  வில் விசை படகு ஓட்ட
69) திருவண்ணாமலை பௌர்ணமி கிரி வலம் வர 
70) தினம் தினம் ஜக்கூஸி யில் அதிக நேரம் குளிக்க 
71)  திருச்சியில் 61" TV யில் பிடித்தமான DVD பார்க்க 
72) ஹாய்யாக ,அமெரிக்காவில் மகன் வீட்டு ஹோம் தியேட்டரில்  படம் பார்க்க 
73)  பின்லாந்த் ஸ்ட்ராபரி தோட்டத்தில் சின்ன பேத்தியுடன் 
       மணிக்கணக்கில்  பழம் பறிக்க 
74) காலையில் பதநீர் குடிக்க , நுங்கு சாப்பிட ;
75) மாதம் ஒருமுறை Dominos Pisa / சிக்கன் burger  சாப்பிட 
76) ஞாயிற்று கிழமை நன்றாக தூங்க 
77)  பாணி பூரி  சாப்பிட 
78)  நேற்று நடந்ததை மறந்து விட்டு இன்றைய நாளை புதிதாய் நினைக்க 
79)  எதிலும் ஏனோ தானோ என்றிருக்காமல்
       வாழ்கையின் நோக்கத்தை  புரிந்து  செயல் பட 
80)  மற்றவர்களுக்கு  இறக்கப் பட 
81)   பெற்றோர் உறவினர் விமர்சனங்கள் கூட உங்கள் வளர்ச்சிக்கு  தடையாக அமையக்கூடும் ; எனவே உதட்டளவு உறவுகள் ஒதுக்கப் பட்டால் தவறில்லை என உணர 
82)    அடிக்கடி ஒய்வு எடுத்துக்கொள்ள 
83)    நோய் வராமலிருக்க முன் கூட்டியே மருத்துவரை அணுகி  உடல் பரிசோதனை செய்து கொள்ள 
84)     வஞ்சிரம் மீனை நானே சமைத்து உண்ண  !(ஏனென்றால் என் மனைவி  சுத்த சைவம் !)
85)    காரில் இயற்கை காட்சி சார்ந்த california scenic drive  மேற்கொள்ள 
86)    பின்லாந்த் காடு களில் தன்னந் தனியாக வாக்கிங் போக , மற்றும் black berry  சேகரிக்க 
87)     அமெரிக்க மால் களில் window shopping செய்ய 
88)    alps மலை ஏறும் துணிகர செயல் பற்றிய IMAX  படம் பார்க்க 
89)    பேரன்/பேத்தி  Harvard university டாக்டர் படிப்பு படிக்க 
90)     மினயொபோலிஸ் lakes சுற்றி சுற்றி வாக்கிங் போக 
91)    மெரினா பீச்சில் மாலை நேரத்தை அனுபவிக்க 
92)     தேங்காய் மாங்காய் சுண்டல் மற்றும் பேல் பூரி சாப்பிட 
93)     வைதீஸ்வரன் கோவில் கார்த்திகை அபிசேகம் பார்க்க 
94)     திருச்சி மலைக்கோட்டை உச்சியில் நின்று காற்று வாங்க 
95)     மனைவி மடியில் தலைவைத்து      படுத்துக்கொண்டு  புத்தகம் படிக்க 
96)     மனைவிக்கு மல்லிகை பூ வாங்கிக் கொடுக்க 
97)     மனைவி கை சமையலை விரும்பி உண்ண 
98)     புது புது உடை உடுத்த 
99)     குளிர்சாதன அறையில் தூங்க 
100)  உடைந்த உறவுகளை என்றாவது ஒட்டவைக்க 
101)  கடைசி வரை,நடை உடையாக வாழ்ந்து  ( படுத்த படுக்கையாகக்  கிடக்காமல்,) தூக்கத்திலேயே உயிர் நீக்க !!

இது போன்ற பட்டியலிட்டு எதுவும் நிறைவேறா விட்டால் அது என் தோல்வி அல்ல ! பட்டியலே போடாமல் இருந்தால் தான் அது  என் தோல்வி !!

இது போல் நீங்களும் சாவதற்கு முன் செய்து முடிக்க விரும்பும் குறைந்தது 101 சின்ன சின்ன ஆசைகளை பட்டியலிடுங்கள் . ஆசைகள் தான் இலட்சியங்களின் அடித்தளம் . ஏன்? ,  இலட்சியம் என்பதே ஒரு வகை ஆசை தானே ! ஒரு மனிதன் துறவி யாக போக வேண்டுமென்றால் கூட , அப்படி துறவியாக போகவேண்டுமென்று ஆசைப்பட்டால் தான் துறவியாக போகமுடியும் !

65 வயது நிரம்பிய எனக்கு என் இலக்கு பட்டியலில் கிட்ட தட்ட 90% நிறைவேறி விட்டது என்றால்  நம்புகிறீர்களா?!  ஆம், நான் எப்போதுமே மற்றவர் களிலிருந்து சற்றே வித்தியாசமாக சிந்திக்க பழகியவன் .

Now , Get  into  action !

பட்டியல் தயாரித்து விட்டீர்களா?  அடுத்து என்ன செய்வது ? அதை தினசரி உங்கள் பார்வையில் படும் இடத்தில் வையுங்கள் ! அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள் ! வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், அதை உங்கள் குடும்பத்தினர் , மற்றும் உற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !
நாளாக நாளாக ,இந்த உலகம் உங்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வீசும் !
அப்போது பட்டியலின் நீளம் கூடலாம் ; திசை மாறலாம், புது எண்ணங்கள் புது புது ஆசைகள்  தோன்றட்டும் !  ஒரு போதும் பட்டியலின் அளவை குறைக்க நினைக்க வேண்டாமே, அன்பர்களே  !

நம் முன்னாள் குடியரசு தலைவர் "இளைஞர்களே கனவு காணுங்கள் !" என்று சொன்னார் ; நான் உங்கள் ஆசை களை . பட்டியலிடுங்கள் என்கிறேன் !












Sunday, March 3, 2013

Living is different from Existing.......

Living is different from Existing.......

வாழ்வது முக்கியம் !

நம் ஒவ்வறுவரின்  வாழ்க்கையின் முக்கிய அம்சம் "இருப்பது" அல்ல , வாழ்வது !

வாழ்வதற்கான சுலபமான வழிமுறைகள் சிலவற்றை பற்றி சிந்திப்பதே இந்த சிறிய கட்டுரையின் நோக்கம்.

உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள் !  ஒவ்வொரு நாளும் நேற்றைய தினத்தைப் போலவே  நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன.

நேசிக்கக் கற்றுக்  கொள்ளுங்கள் ! உங்களை முதலில் நேசியுங்கள் . உங்கள் குடும்பத்தினரை நேசியுங்கள் ; உங்கள் நண்பர்களை நேசியுங்கள் ; உங்கள் உறவினர்களை நேசியுங்கள் ; மனித இனத்தை நேசியுங்கள் !

நாலு சுவற்றிற்குள் இருக்காதீர்கள் . மழையை நேசியுங்கள் ; இயற்கையை நேசியுங்கள் . கடற் கரையில் நடக்க விரும்புங்கள் . மரங்கள் அடர்ந்த சின்ன சின்ன காடுகளுக்கு மத்தியில் உலவுங்கள் ; நீச்சலடிக்க விரும்புங்கள் ;சூரிய வெளிச்சம் உங்கள் மேல் படுவதை அனுபவியுங்கள் . ஓடி விளையாட  முயலுங்கள் . பச்சை பசேலென்ற புல்வெளியைப் பார்த்தால் , வெறுங் காலோடு  அந்தப் புல்வெளியில் நடந்து அனுபவியுங்கள் !.

உணவுகளை அவசர அவசரமாக திண்காதீர்கள் ; அனுபவித்து உண்ணப் பழகுங்கள் ! உணவுகளின் சுவைகளை ,அதன் வாசத்தை, அதன் மென்மையை சுவைத்து சுவைத்து மகிழ்ந்து ,ஒவ்வொரு கடியையும் ருசித்து உண்ணுங்கள் ;
Dark choclate களை  மெல்ல மெல்ல கடித்து சுவைப்பதை போல!

காலை கடன்கள் இன்றியமையாதது . படுக்கையை விட்டு அதிகாலை விழிப்பு வந்தவுடன்  விருட்டென எழுந்திருங்கள் . சூரியன் உதயமாவது  நீங்கள் பார்பதற்க்காகதான் ! அதனைப் பார்த்து ரசியுங்கள் .
"இன்று விடிந்த இந்த விடியலை , இந்தப் பொன்னான நாளை , நான் ஒருபோதும்  வீணாக்க மாட்டேன் !"  என்று ஒவ்வொரு காலையும்  வாய் விட்டுக் கத்திச் சொல்லுங்கள் !
ஒவ்வொரு விடியலும் இறைவன் உங்களுக்குக் கொடுத்த வரம் ! எனவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்  பொழுதையும்  நாம் முழுமையாக வாழவேண்டும் .
காலையில் உடலை நீட்டி மடக்கி பயிற்சி மேற்கொள்ளுங்கள் . சற்றே நடங்கள் ; முடிந்தால் சற்றே ஓடுங்கள் ! பின்னர் அமைதியாக coffee  அருந்துங்கள் . காபியை வெறுமனே குடித்து விடாதீர்கள் . அதன் நெடியை , சுவையை, சுவைத்து அருந்தி மகிழுங்கள் . அது தான் நான் முன் கூறிய இருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் !

அன்றாடம் கொஞ்சம் துணிவு , கொஞ்சம் Risk  எடுக்க பழக வேண்டும் . துணிவு இல்லாமல் வெற்றியடைய முடியாது ! உதாரணமாக எப்போதும் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக வியாபாரத்தில் இறங்க துணிவு வேண்டும்.
அதற்கென முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும் . இன்னுமொரு உதாரணம் வேண்டுமென்றால் , நீண்ட நாட்களாக மனதிற்குள் நேசித்த உங்கள் காதலியை நேரில் அணுகி "நான் உன்னைக் காதலிக்கிறேன் " என்று சொல்கிற துணிவு மிகவும் அவசியம் !

உங்களுக்கு ஆர்வம் மிக்க விசயங்களில் , உங்களை துணிவுடன் ஈடுபடுத்துங்கள் .அப்போதுதான் அன்றாடம் உங்கள் வாழ்கை வெற்றிப் பாதையில்  செல்லும் . உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள் ;நீங்கள் நேசிப்பதை தினம் தினம் செய்யுங்கள் ; ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது ஒரு முறைதான் !

computer  முன்னால் உட்கார்ந்து நாள்  முழுக்க செலவிடாதீர்கள் ! மணிக்கணக்காக பகலிலும் இரவிலும்  internet /chatting என்று  ஈடுபட்டு  நாட்களையும் பொழுதுகளையும் வீணடிக்காதீர்கள் . நீங்கள் வாழ வேண்டிய உலகம் வெளியில் உள்ளது என்று உணருங்கள் ! TV  யை அணைத்து விடுங்கள் ! எதனை மணி  நேரம் தான் இந்த TV  முன்னால் உட்கார்ந்து வீணடிப்பது ! நம் வாழ்க்கை மொத்தம் எதனை மணி நேரம்? .. நாம் TV   முன்னால் எதனை மணி நேரம் அமர்ந்திருப்போம் ? என்பதை எல்லாம் கணக்குப் போட்டுப் பாருங்கள் !   எப்போதாவது உங்களுக்கு பிடித்த DVD  / படம் பார்க்க வேண்டுமென்றால் டிவி யை போட்டுக்கொள்ளலாம் . இப்போதைக்கு TV  யை அணைத்து விடுங்கள் !

Internet ஐ  அணைத்து விடுங்கள் ! உங்கள் பொன்னான நேரங்களில்  எத்தனை  எத்தனை  மணிகள்  இந்த internet இல் தொலைத்து விட்டீர்கள் ? வீட்டை விட்டு சற்றே வெளியில் வாருங்கள் ; முடிந்தால் அலுவலகத்தை விட்டும் சற்றே வெளியில் வாருங்கள் ! 

பயணியுங்கள் ; விடுமுறை நாட்களை பயணித்துக் களியுங்கள் ; முடிந்தால் பயணத்திலேயே உங்கள் பணிகளையும் ஆற்றுங்கள் . அதற்காக உங்கள் வேலையைக் கூட நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் . தவறொன்றும் இல்லை !
எதற்கும் கவலைப் படாதீர்கள் . Email  வாரத்திற்கு ஒரு முறை செக் செய்தால் போதும். தினமும் பலமுறை ஈமெயில் பார்ப்பதை நிறுத்துங்கள் .

ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்து ,சிந்தித்து , உங்களுக்கு முக்கியமானவை  எவை எவை , என்று கண்டறியுங்கள் . அதனை வரிசை படுத்தி லிஸ்ட் ஒன்றை தயாரியுங்கள் . உங்கள் வாழ்கையில் நீங்கள் எதை எதை எல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ  அதை எல்லாம் அந்த list இல்  சேர்த்துக்கொள்ளுங்கள் ! "List " மிகவும் நீண்டு விட்டதா? கவலை வேண்டாம் . பின்னர் அந்த லிஸ்டை சுருக்கி , உங்களுக்கு மிகவும் முக்கியமான , விருப்பமான முதல் 10 செயல்களை  மட்டும் list இல் வரும்படியாக அந்த லிஸ்டை  சுருக்கி  அமையுங்கள் . இப்போது உங்கள் வாழ்கையின் நோக்கம் அந்த list  இல்  அடங்கி இருக்கும்!  அதனை தினமும் focus  செய்யுங்கள் ! அதற்காக நேரம் ஒதுக்குங்கள் !

அன்றாட வாழ்கையில் உடற் பயிற்சி மிகவும் முக்கியம் . நடக்க வேண்டும். முடிந்தால் ஓடுங்கள்! சைக்கிள்  ஒட்டுங்கள் ! அலுவலகத்திற்கு காரில் செல்வதற்கு பதிலாக முடிந்தால் சைக்கிளில் செல்லுங்கள் ; நீந்துங்கள் ; பனியில் சறுக்கி விளையாடுங்கள் ! எப்படியாவது உடலை சுறுசுறுப் படையச் செய்யுங்கள் . அப்போது தான் வாழ்க்கை உயிரோட்டத்துடன் இருக்கும் .உங்கள் உடல் தான் உங்கள் உயிரின் வாகனம் உண்பதை உணருங்கள் !

மனதளவில் நேர்மறை அதாவது positive  ஆக இருங்கள் ! மனதை எப்போதும் திறந்து வைத்திருங்கள் ! பிறர் அன்பை பெறுவதற்கு உங்கள் மனம் திறந்திருக்கவேண்டும் . பிறரிடம் அன்பு செலுத்துவதற்கும் , உங்கள் மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். . எனவே மனதை எப்போதும் திறந்து வைத்திருங்கள் !

உங்களுக்கு எதன் மீது பயம் என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள் .நீங்கள் எது எதற்ககெல்லாம் பயப் படுகிறீர்களோ  அந்த அந்த பயங்களை நேரடியாக சந்தியுங்கள் ! இருட்டை கண்டு பயந்தால் நள்ளிரவில் தனியாக நடந்து செல்லுங்கள் ! உயரத்தைக் கண்டு பயந்தால் , பெரிய உயரமான கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு கீழே உற்று  நோக்குங்கள் ! பயங்களை கண்டு ஓடி  ஒளிய வேண்டாம் ! பயங்களை நேருக்கு நேர் சந்திப்பது ஒன்றே பயத்திலிருந்து வெளியேற சரியான வழியாகும் !

துன்பம் வரும்போது அதையும் அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள் ! துன்பத்தைக் கண்டு துவண்டு போகவேண்டாம் ; வேடிக்கையும் விளையாட்டும் மட்டுமல்ல வாழ்க்கை ! துன்பமும் வாழ்கையின் ஓர் அங்கம் தான் ! யாராலும் துன்பங்களை முற்றிலுமாக வாழ்க்கையிலிருந்து பிரித்து வைத்துவிட முடியாது .

இழப்புகள் இயற்கையானவை . அன்புக் காதலரை இழக்க நேரலாம் ; செல்லப் பிராணியை இழக்க நேரலாம் ; ஏன்? ஒரு சமயம் பெற்றோரைக் கூட இழக்க நேரலாம் ;  செய்கிற வேலையை இழக்க நேரலாம்,  ஒரு காலத்தில் ஈட்டிய செல்வதை இழக்கலாம் ; சற்றே உடல் ஆரோக்கியத்தை இழக்க நேரலாம் !

வலிகளை பொறுத்துக்கொள்ள பழகுங்கள் ; வலி வாழ்கையின் ஒரு பகுதி !
வலிகளையும் சற்றே உணர்ந்து அனுபவியுங்கள் ;அப்போது தான் வலிகளை தாங்கும் வல்லமை கிடைக்கும் .!  சற்றே வலி நீங்கியதும் உண்டாகும் மகிழ்ச்சி பெரியது ! அதற்காகவே வலிகளை தாங்கிக் கொள்ளுங்கள் !

வாழ்க்கை மிகவும் வேகமாகிக் கொண்டே போகின்ற இந்த கால கட்டங்களில் ,
நீங்கள் சற்றே  உங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்ளப் பழகுங்கள் ! எதையும் நிதான மாக  சிந்தித்து , நிதானமாக செயல் படுங்கள் !  சாப்பிடுவது முதல் , நடப்பது, கார் ஓட்டுவது, படிப்பது , என்று ஒவ்வொன்றையும் சற்றே நிதானித்து செய்யுங்கள் . அப்போது தான் நீங்கள் செய்யும் செயலை அனுபவித்துச் செய்ய முடியும். "Enjoy  what you do !"

உங்கள் மனதுக்குள் இருக்கும் மனித நேய உணர்வை அவ்வப்போது தூண்டி விடுங்கள் .  முடிந்த போது செயல் படுத்துங்கள் ! அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏழை எளியவர்களைப் பாருங்கள் ! அவர்களோடு பேசுங்கள் ; அவர்களையும் புரிந்துகொள்ளுங்கள் ; அவர்களில் ஒருவராக உங்களை பாவியுங்கள் !
மற்றவர் வலிகளை குறைக்க உங்களால் என்ன என்ன செய்ய முடியும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் !

குழந்தைகளைக் கொண்டாடுங்கள் ! குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள் ! சந்தோசம் ,துக்கம், இரண்டையுமே  எல்லாக் கணங்களிலும் முழுமையாக மறைக்காமல் அனுபவிப்பது என்பது குழந்தை உள்ளதால் மட்டுமே முடியும்.! இன்பத்தால் உடனே சிரிப்பதற்கும் ,துன்பத்தால் அடிபட்டால் , உடனே அழுது விடுவதற்கும்  குழந்தை களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் !

வயோதியர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் ! வயோதியர்களைக் கண்டால் அவர்களுடன் பரிவாகப் பேசுங்கள் ! அவர்கள் வாழ்க்கை அனுபவம் உங்களுக்கும் உதவக்கூடும் ! வயோதியர்கள் அனைவரும் வாழ்கையை ஒவ்வொரு விதத்தில் வாழ்ந்து முடித்தவர்கள் ! அவர்கள் அனுபவங்களை சொல்ல சொல்லி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . கல்யாணம் முதல் கடன் வாங்காமல் வாழ்வது வரை அவர்களின் அனுபவங்களும் உங்களுக்கும் பயன்படும். அந்த வாழ்க்கை பாடங்களுக்கு விலை மதிப்பு இல்லை !

ஏற்கனவே சொன்னது போல் , எப்போதும் உங்களை நீங்கள் மனதார நேசியுங்கள் .தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள் ! வாழ்கையில் முன்னேறும் வழி அதுதான் . ஒவ்வொரு கணமும், உங்களுக்குள் இருக்கும் சக்தியை  நீங்கள் உணர முயலுங்கள் !தெய்வத்தை தேடுவதற்கு அதுவே சிறந்த வழி !

இடை இடையே சிவனே என்று இருக்கப் பழகுங்கள் ! சிவனே என்று இருப்பது என்றால் , எதையுமே செய்யாமல் சற்றே ஓய்வு எடுப்பது தான் ! எதையுமே செய்யாமல் இருப்பதில் கூட மதிப்பு இருக்கிறது . நீங்கள் எதையுமே செய்யாமல் இருக்கும் போதுதான்  உங்கள் உள்ளுணர்வு பேச ஆரம்பிக்கும் !
ஆன்மா செயல்படும் !"You  can hear your inner voice !"

வீடியோ games , online games ,computer solidaire  போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதை தவிர்த்து விடுங்கள் ! வெட்ட வெளியில் சென்று விளையாட ஆசைபடுங்கள் !

மலையில் சூரியன் அஸ்தமன மாவதை  நேரில் பார்ப்பதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள் ! முடிந்தால் சூரிய அச்தமனதைப் பார்த்துக்கொண்டே , உங்கள் மெல்லிய இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் !

உபயோக மற்ற வார பத்திரிகை , மாத பத்திரிகை களை படிப்பதை நிறுத்திவிடுங்கள் ! வேண்டுமானால் நல்ல நாவல்களை படியுங்கள் !அறிஞர்களின் வாழ்கை குறிப்புகள், சுய சரிதைகளை படியுங்கள்  !அல்லது தினம் நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் என் அறிவுரைக் கட்டுரை போன்ற வற்றை மீண்டும் மீண்டும் படியுங்கள் !

ஒவ்வொரு நாளும் உங்கள் வேலையை ஒரு புதிய கோணத்தில் தொடர முயலுங்கள் ! சிரிக்கும் போது ,உங்களுக்கு கண்ணில் நீர் வரும் வரை நன்றாக வாய் விட்டு சிரியுங்கள் ! "Laugh  till  you  cry !"  சிரிக்க சிரிக்க பேச தெரிந்த வர்களோடு பேசி கொண்டிருங்கள் ! நீங்களும் சிரிக்க சிரிக்க பேசிப் பழகுங்கள் !
comedy படங்களை பாருங்கள் ! சிரித்தால் ஒன்றும் கெட்டுப் போகாது!

மனக் கட்டுப்பாடு களை  சற்றே தளர்த்திக்கொண்டு , மன இறுக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் ! சிட்டுக் குருவி போல உங்கள் மனம் சிறகடித்துப்  பறக்கட்டும் . உங்களை மட்டுமல்லாமல் , உங்களை சுற்றியிருப்போரையும் தேவையற்ற கட்டுப்பாடு களுக்கு உட்படுத்த நினைக்காதீர்கள் ! "LIVE  LIKE A FREE BIRD !" உங்கள் மனைவி மற்றும் குழந்தை களிடமும் தேவை யற்ற கட்டுப் பாடுகளை திணிக்க முயலாதீர்கள் !

எப்போதாவது அழுக நேரிட்டால் ,அழுகையை அடக்க முயலவேண்டாம் !
முடிந்த அளவிற்கு கதறி அழுது தீர்த்து விடுங்கள் ! அழுது முடித்ததும் உங்கள் மன அழுத்தம் வெகுவாக குறைந்து விடும் !

ஏதேனும் சாவை பார்க்க நேர்ந்தால் கொஞ்சமேனும் உங்களுக்கு அழுகை வரவேண்டும் ; நெருங்கியவர்கள் சாவிற்குக் கூட அழுகாமல் இருந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன் ; பிறர் துன்பம் அடைவதைக் கண்டால் , உங்களை அறியாமல் உங்கள் கண்களில் நீர் வரவேண்டும் . நீங்கள் நேசிப்பவருக்கு வலித்தால் , அது உங்களுக்கு அழுகையாக வெளிப்படவேண்டும் .உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் உணர்வுகள் உடனுக்குடன் வெளிப்படும். உணர்வுகள் வெளிப்பட்டால் தான் உள்ளம் சுத்தமாக இருக்க வகை ஏற்படும் !
Both  are inter related .

வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை ! துன்பமும் நிரந்தரமில்லை ! துன்பம் நீங்கியதும் மறுபடியும் சிரியுங்கள் ! வாரத்திற்கு ஒரு முறையேனும் புதிதாக ஏதாவது உணவு செய்து உண்டு மகிழுங்கள் ! இந்த நிமிடம் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கு மானால் இது போல் எப்போதும் மகிழ்வுடன் இருக்க முயலுங்கள் !

இந்த கட்டுரை உங்களுக்குள் ஒரு சிறு மாறத்தை ஏற்படுத்தி இருந்தால் , நிச்சயம் என்னுடன்  உங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளுங்கள் !