Living is different from Existing.......
வாழ்வது முக்கியம் !
நம் ஒவ்வறுவரின் வாழ்க்கையின் முக்கிய அம்சம் "இருப்பது" அல்ல , வாழ்வது !
வாழ்வதற்கான சுலபமான வழிமுறைகள் சிலவற்றை பற்றி சிந்திப்பதே இந்த சிறிய கட்டுரையின் நோக்கம்.
உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள் ! ஒவ்வொரு நாளும் நேற்றைய தினத்தைப் போலவே நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன.
நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ! உங்களை முதலில் நேசியுங்கள் . உங்கள் குடும்பத்தினரை நேசியுங்கள் ; உங்கள் நண்பர்களை நேசியுங்கள் ; உங்கள் உறவினர்களை நேசியுங்கள் ; மனித இனத்தை நேசியுங்கள் !
நாலு சுவற்றிற்குள் இருக்காதீர்கள் . மழையை நேசியுங்கள் ; இயற்கையை நேசியுங்கள் . கடற் கரையில் நடக்க விரும்புங்கள் . மரங்கள் அடர்ந்த சின்ன சின்ன காடுகளுக்கு மத்தியில் உலவுங்கள் ; நீச்சலடிக்க விரும்புங்கள் ;சூரிய வெளிச்சம் உங்கள் மேல் படுவதை அனுபவியுங்கள் . ஓடி விளையாட முயலுங்கள் . பச்சை பசேலென்ற புல்வெளியைப் பார்த்தால் , வெறுங் காலோடு அந்தப் புல்வெளியில் நடந்து அனுபவியுங்கள் !.
உணவுகளை அவசர அவசரமாக திண்காதீர்கள் ; அனுபவித்து உண்ணப் பழகுங்கள் ! உணவுகளின் சுவைகளை ,அதன் வாசத்தை, அதன் மென்மையை சுவைத்து சுவைத்து மகிழ்ந்து ,ஒவ்வொரு கடியையும் ருசித்து உண்ணுங்கள் ;
Dark choclate களை மெல்ல மெல்ல கடித்து சுவைப்பதை போல!
காலை கடன்கள் இன்றியமையாதது . படுக்கையை விட்டு அதிகாலை விழிப்பு வந்தவுடன் விருட்டென எழுந்திருங்கள் . சூரியன் உதயமாவது நீங்கள் பார்பதற்க்காகதான் ! அதனைப் பார்த்து ரசியுங்கள் .
"இன்று விடிந்த இந்த விடியலை , இந்தப் பொன்னான நாளை , நான் ஒருபோதும் வீணாக்க மாட்டேன் !" என்று ஒவ்வொரு காலையும் வாய் விட்டுக் கத்திச் சொல்லுங்கள் !
ஒவ்வொரு விடியலும் இறைவன் உங்களுக்குக் கொடுத்த வரம் ! எனவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் நாம் முழுமையாக வாழவேண்டும் .
காலையில் உடலை நீட்டி மடக்கி பயிற்சி மேற்கொள்ளுங்கள் . சற்றே நடங்கள் ; முடிந்தால் சற்றே ஓடுங்கள் ! பின்னர் அமைதியாக coffee அருந்துங்கள் . காபியை வெறுமனே குடித்து விடாதீர்கள் . அதன் நெடியை , சுவையை, சுவைத்து அருந்தி மகிழுங்கள் . அது தான் நான் முன் கூறிய இருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் !
அன்றாடம் கொஞ்சம் துணிவு , கொஞ்சம் Risk எடுக்க பழக வேண்டும் . துணிவு இல்லாமல் வெற்றியடைய முடியாது ! உதாரணமாக எப்போதும் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக வியாபாரத்தில் இறங்க துணிவு வேண்டும்.
அதற்கென முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும் . இன்னுமொரு உதாரணம் வேண்டுமென்றால் , நீண்ட நாட்களாக மனதிற்குள் நேசித்த உங்கள் காதலியை நேரில் அணுகி "நான் உன்னைக் காதலிக்கிறேன் " என்று சொல்கிற துணிவு மிகவும் அவசியம் !
உங்களுக்கு ஆர்வம் மிக்க விசயங்களில் , உங்களை துணிவுடன் ஈடுபடுத்துங்கள் .அப்போதுதான் அன்றாடம் உங்கள் வாழ்கை வெற்றிப் பாதையில் செல்லும் . உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள் ;நீங்கள் நேசிப்பதை தினம் தினம் செய்யுங்கள் ; ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது ஒரு முறைதான் !
computer முன்னால் உட்கார்ந்து நாள் முழுக்க செலவிடாதீர்கள் ! மணிக்கணக்காக பகலிலும் இரவிலும் internet /chatting என்று ஈடுபட்டு நாட்களையும் பொழுதுகளையும் வீணடிக்காதீர்கள் . நீங்கள் வாழ வேண்டிய உலகம் வெளியில் உள்ளது என்று உணருங்கள் ! TV யை அணைத்து விடுங்கள் ! எதனை மணி நேரம் தான் இந்த TV முன்னால் உட்கார்ந்து வீணடிப்பது ! நம் வாழ்க்கை மொத்தம் எதனை மணி நேரம்? .. நாம் TV முன்னால் எதனை மணி நேரம் அமர்ந்திருப்போம் ? என்பதை எல்லாம் கணக்குப் போட்டுப் பாருங்கள் ! எப்போதாவது உங்களுக்கு பிடித்த DVD / படம் பார்க்க வேண்டுமென்றால் டிவி யை போட்டுக்கொள்ளலாம் . இப்போதைக்கு TV யை அணைத்து விடுங்கள் !
Internet ஐ அணைத்து விடுங்கள் ! உங்கள் பொன்னான நேரங்களில் எத்தனை எத்தனை மணிகள் இந்த internet இல் தொலைத்து விட்டீர்கள் ? வீட்டை விட்டு சற்றே வெளியில் வாருங்கள் ; முடிந்தால் அலுவலகத்தை விட்டும் சற்றே வெளியில் வாருங்கள் !
பயணியுங்கள் ; விடுமுறை நாட்களை பயணித்துக் களியுங்கள் ; முடிந்தால் பயணத்திலேயே உங்கள் பணிகளையும் ஆற்றுங்கள் . அதற்காக உங்கள் வேலையைக் கூட நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் . தவறொன்றும் இல்லை !
எதற்கும் கவலைப் படாதீர்கள் . Email வாரத்திற்கு ஒரு முறை செக் செய்தால் போதும். தினமும் பலமுறை ஈமெயில் பார்ப்பதை நிறுத்துங்கள் .
ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்து ,சிந்தித்து , உங்களுக்கு முக்கியமானவை எவை எவை , என்று கண்டறியுங்கள் . அதனை வரிசை படுத்தி லிஸ்ட் ஒன்றை தயாரியுங்கள் . உங்கள் வாழ்கையில் நீங்கள் எதை எதை எல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ அதை எல்லாம் அந்த list இல் சேர்த்துக்கொள்ளுங்கள் ! "List " மிகவும் நீண்டு விட்டதா? கவலை வேண்டாம் . பின்னர் அந்த லிஸ்டை சுருக்கி , உங்களுக்கு மிகவும் முக்கியமான , விருப்பமான முதல் 10 செயல்களை மட்டும் list இல் வரும்படியாக அந்த லிஸ்டை சுருக்கி அமையுங்கள் . இப்போது உங்கள் வாழ்கையின் நோக்கம் அந்த list இல் அடங்கி இருக்கும்! அதனை தினமும் focus செய்யுங்கள் ! அதற்காக நேரம் ஒதுக்குங்கள் !
அன்றாட வாழ்கையில் உடற் பயிற்சி மிகவும் முக்கியம் . நடக்க வேண்டும். முடிந்தால் ஓடுங்கள்! சைக்கிள் ஒட்டுங்கள் ! அலுவலகத்திற்கு காரில் செல்வதற்கு பதிலாக முடிந்தால் சைக்கிளில் செல்லுங்கள் ; நீந்துங்கள் ; பனியில் சறுக்கி விளையாடுங்கள் ! எப்படியாவது உடலை சுறுசுறுப் படையச் செய்யுங்கள் . அப்போது தான் வாழ்க்கை உயிரோட்டத்துடன் இருக்கும் .உங்கள் உடல் தான் உங்கள் உயிரின் வாகனம் உண்பதை உணருங்கள் !
மனதளவில் நேர்மறை அதாவது positive ஆக இருங்கள் ! மனதை எப்போதும் திறந்து வைத்திருங்கள் ! பிறர் அன்பை பெறுவதற்கு உங்கள் மனம் திறந்திருக்கவேண்டும் . பிறரிடம் அன்பு செலுத்துவதற்கும் , உங்கள் மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். . எனவே மனதை எப்போதும் திறந்து வைத்திருங்கள் !
உங்களுக்கு எதன் மீது பயம் என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள் .நீங்கள் எது எதற்ககெல்லாம் பயப் படுகிறீர்களோ அந்த அந்த பயங்களை நேரடியாக சந்தியுங்கள் ! இருட்டை கண்டு பயந்தால் நள்ளிரவில் தனியாக நடந்து செல்லுங்கள் ! உயரத்தைக் கண்டு பயந்தால் , பெரிய உயரமான கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு கீழே உற்று நோக்குங்கள் ! பயங்களை கண்டு ஓடி ஒளிய வேண்டாம் ! பயங்களை நேருக்கு நேர் சந்திப்பது ஒன்றே பயத்திலிருந்து வெளியேற சரியான வழியாகும் !
துன்பம் வரும்போது அதையும் அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள் ! துன்பத்தைக் கண்டு துவண்டு போகவேண்டாம் ; வேடிக்கையும் விளையாட்டும் மட்டுமல்ல வாழ்க்கை ! துன்பமும் வாழ்கையின் ஓர் அங்கம் தான் ! யாராலும் துன்பங்களை முற்றிலுமாக வாழ்க்கையிலிருந்து பிரித்து வைத்துவிட முடியாது .
இழப்புகள் இயற்கையானவை . அன்புக் காதலரை இழக்க நேரலாம் ; செல்லப் பிராணியை இழக்க நேரலாம் ; ஏன்? ஒரு சமயம் பெற்றோரைக் கூட இழக்க நேரலாம் ; செய்கிற வேலையை இழக்க நேரலாம், ஒரு காலத்தில் ஈட்டிய செல்வதை இழக்கலாம் ; சற்றே உடல் ஆரோக்கியத்தை இழக்க நேரலாம் !
வலிகளை பொறுத்துக்கொள்ள பழகுங்கள் ; வலி வாழ்கையின் ஒரு பகுதி !
வலிகளையும் சற்றே உணர்ந்து அனுபவியுங்கள் ;அப்போது தான் வலிகளை தாங்கும் வல்லமை கிடைக்கும் .! சற்றே வலி நீங்கியதும் உண்டாகும் மகிழ்ச்சி பெரியது ! அதற்காகவே வலிகளை தாங்கிக் கொள்ளுங்கள் !
வாழ்க்கை மிகவும் வேகமாகிக் கொண்டே போகின்ற இந்த கால கட்டங்களில் ,
நீங்கள் சற்றே உங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்ளப் பழகுங்கள் ! எதையும் நிதான மாக சிந்தித்து , நிதானமாக செயல் படுங்கள் ! சாப்பிடுவது முதல் , நடப்பது, கார் ஓட்டுவது, படிப்பது , என்று ஒவ்வொன்றையும் சற்றே நிதானித்து செய்யுங்கள் . அப்போது தான் நீங்கள் செய்யும் செயலை அனுபவித்துச் செய்ய முடியும். "Enjoy what you do !"
உங்கள் மனதுக்குள் இருக்கும் மனித நேய உணர்வை அவ்வப்போது தூண்டி விடுங்கள் . முடிந்த போது செயல் படுத்துங்கள் ! அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏழை எளியவர்களைப் பாருங்கள் ! அவர்களோடு பேசுங்கள் ; அவர்களையும் புரிந்துகொள்ளுங்கள் ; அவர்களில் ஒருவராக உங்களை பாவியுங்கள் !
மற்றவர் வலிகளை குறைக்க உங்களால் என்ன என்ன செய்ய முடியும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் !
குழந்தைகளைக் கொண்டாடுங்கள் ! குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள் ! சந்தோசம் ,துக்கம், இரண்டையுமே எல்லாக் கணங்களிலும் முழுமையாக மறைக்காமல் அனுபவிப்பது என்பது குழந்தை உள்ளதால் மட்டுமே முடியும்.! இன்பத்தால் உடனே சிரிப்பதற்கும் ,துன்பத்தால் அடிபட்டால் , உடனே அழுது விடுவதற்கும் குழந்தை களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் !
வயோதியர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் ! வயோதியர்களைக் கண்டால் அவர்களுடன் பரிவாகப் பேசுங்கள் ! அவர்கள் வாழ்க்கை அனுபவம் உங்களுக்கும் உதவக்கூடும் ! வயோதியர்கள் அனைவரும் வாழ்கையை ஒவ்வொரு விதத்தில் வாழ்ந்து முடித்தவர்கள் ! அவர்கள் அனுபவங்களை சொல்ல சொல்லி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . கல்யாணம் முதல் கடன் வாங்காமல் வாழ்வது வரை அவர்களின் அனுபவங்களும் உங்களுக்கும் பயன்படும். அந்த வாழ்க்கை பாடங்களுக்கு விலை மதிப்பு இல்லை !
ஏற்கனவே சொன்னது போல் , எப்போதும் உங்களை நீங்கள் மனதார நேசியுங்கள் .தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள் ! வாழ்கையில் முன்னேறும் வழி அதுதான் . ஒவ்வொரு கணமும், உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்கள் உணர முயலுங்கள் !தெய்வத்தை தேடுவதற்கு அதுவே சிறந்த வழி !
இடை இடையே சிவனே என்று இருக்கப் பழகுங்கள் ! சிவனே என்று இருப்பது என்றால் , எதையுமே செய்யாமல் சற்றே ஓய்வு எடுப்பது தான் ! எதையுமே செய்யாமல் இருப்பதில் கூட மதிப்பு இருக்கிறது . நீங்கள் எதையுமே செய்யாமல் இருக்கும் போதுதான் உங்கள் உள்ளுணர்வு பேச ஆரம்பிக்கும் !
ஆன்மா செயல்படும் !"You can hear your inner voice !"
வீடியோ games , online games ,computer solidaire போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதை தவிர்த்து விடுங்கள் ! வெட்ட வெளியில் சென்று விளையாட ஆசைபடுங்கள் !
மலையில் சூரியன் அஸ்தமன மாவதை நேரில் பார்ப்பதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள் ! முடிந்தால் சூரிய அச்தமனதைப் பார்த்துக்கொண்டே , உங்கள் மெல்லிய இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் !
உபயோக மற்ற வார பத்திரிகை , மாத பத்திரிகை களை படிப்பதை நிறுத்திவிடுங்கள் ! வேண்டுமானால் நல்ல நாவல்களை படியுங்கள் !அறிஞர்களின் வாழ்கை குறிப்புகள், சுய சரிதைகளை படியுங்கள் !அல்லது தினம் நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் என் அறிவுரைக் கட்டுரை போன்ற வற்றை மீண்டும் மீண்டும் படியுங்கள் !
ஒவ்வொரு நாளும் உங்கள் வேலையை ஒரு புதிய கோணத்தில் தொடர முயலுங்கள் ! சிரிக்கும் போது ,உங்களுக்கு கண்ணில் நீர் வரும் வரை நன்றாக வாய் விட்டு சிரியுங்கள் ! "Laugh till you cry !" சிரிக்க சிரிக்க பேச தெரிந்த வர்களோடு பேசி கொண்டிருங்கள் ! நீங்களும் சிரிக்க சிரிக்க பேசிப் பழகுங்கள் !
comedy படங்களை பாருங்கள் ! சிரித்தால் ஒன்றும் கெட்டுப் போகாது!
மனக் கட்டுப்பாடு களை சற்றே தளர்த்திக்கொண்டு , மன இறுக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் ! சிட்டுக் குருவி போல உங்கள் மனம் சிறகடித்துப் பறக்கட்டும் . உங்களை மட்டுமல்லாமல் , உங்களை சுற்றியிருப்போரையும் தேவையற்ற கட்டுப்பாடு களுக்கு உட்படுத்த நினைக்காதீர்கள் ! "LIVE LIKE A FREE BIRD !" உங்கள் மனைவி மற்றும் குழந்தை களிடமும் தேவை யற்ற கட்டுப் பாடுகளை திணிக்க முயலாதீர்கள் !
எப்போதாவது அழுக நேரிட்டால் ,அழுகையை அடக்க முயலவேண்டாம் !
முடிந்த அளவிற்கு கதறி அழுது தீர்த்து விடுங்கள் ! அழுது முடித்ததும் உங்கள் மன அழுத்தம் வெகுவாக குறைந்து விடும் !
ஏதேனும் சாவை பார்க்க நேர்ந்தால் கொஞ்சமேனும் உங்களுக்கு அழுகை வரவேண்டும் ; நெருங்கியவர்கள் சாவிற்குக் கூட அழுகாமல் இருந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன் ; பிறர் துன்பம் அடைவதைக் கண்டால் , உங்களை அறியாமல் உங்கள் கண்களில் நீர் வரவேண்டும் . நீங்கள் நேசிப்பவருக்கு வலித்தால் , அது உங்களுக்கு அழுகையாக வெளிப்படவேண்டும் .உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் உணர்வுகள் உடனுக்குடன் வெளிப்படும். உணர்வுகள் வெளிப்பட்டால் தான் உள்ளம் சுத்தமாக இருக்க வகை ஏற்படும் !
Both are inter related .
வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை ! துன்பமும் நிரந்தரமில்லை ! துன்பம் நீங்கியதும் மறுபடியும் சிரியுங்கள் ! வாரத்திற்கு ஒரு முறையேனும் புதிதாக ஏதாவது உணவு செய்து உண்டு மகிழுங்கள் ! இந்த நிமிடம் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கு மானால் இது போல் எப்போதும் மகிழ்வுடன் இருக்க முயலுங்கள் !
இந்த கட்டுரை உங்களுக்குள் ஒரு சிறு மாறத்தை ஏற்படுத்தி இருந்தால் , நிச்சயம் என்னுடன் உங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளுங்கள் !

No comments:
Post a Comment