இலட்சிய இலக்குகள் ........ஒரு கூடை !
Every Man dies -Not every man really lives .....(William Ross )
உங்கள் வாழ்கையில் செய்து முடிக்க எண்ணும் ஒரு நூறு காரியங்களை பட்டியல் இடுங்கள் . என்ன கனவுகளை அடைய விரும்புகிறீர்கள்
?... என்ன இலட்சியங்கள் உங்களை உந்துகின்றன? .. என்ன மாதிரியான அனுபவங்களுக்கு ஆசை படுகிறீர்கள் ? இன்னும் சுருக்கமாக கேட்டால் எத்தகைய முடிவை நோக்கி திட்டமிட்டு நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ? கடந்த 3 மாதங்களில் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனை என்று எதை சொல்லுவீர்கள் ? அடுத்த 3 மாதங்களுக்கு உங்கள் இலக்கு எதுவாக இருக்கிறது ?
இலட்சியம் அமைத்துக் கொள்வதென்பது , உங்கள் செயல் திறன் , வேலை , உடல் ஆரோக்கியம் என்ற சில சமூக காரணிகளின் அடிப்படியில் மட்டுமின்றி
உங்கள் சின்ன சின்ன ஆசைகளாகவும் கூட இருக்கலாம் . இப்படி பட்டியலிட்டு வாழும் வாழ்க்கை , நமக்கு என்னவெல்லாம் கிடைக்க விருக்கிறது , என்னவெல்லாம் கிடைக்க கூடும் என்ற தணியாத ஆர்வத்தை உள்ளடக்கி இருக்கும் .இந்த உலகில் நாம் வாழும் காலம் சிறியது . அதில் அர்தமற்ற செயல்களுக்கு நேரம் செலவிடாமல் ,ஒவ்வொரு கணங்களையும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஓர் ஞானி இன்னும் போதித்துக் கொண்டிருக்கிறார் .
Live your life to the fullest extend, by maximizing every moment of
your existence.
உங்கள் இலட்சியப் பட்டியல் தயாரிக்க ஆரம்பிக்கும் முன்னர் ,நீங்கள் என்னுடைய இலட்சியப் பட்டியலை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள் அல்லவா?.....
இதோ உங்களுக்காக !
1) புகைப்படம் ஒரு கோடி
2) வங்கித் துறையில் விருது
3) வெளிநாட்டிற்கு விமானத்தில் பறந்து செல்ல
4) கப்பலில் செல்ல
5) என் உடல் எடையை குறைக்க
6) அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்க
7) ஐரோப்பா செல்ல
8) eiffel tower - இரவில் பார்க்க வேண்டும்
9) நயாகரா நீர் வீழ்ச்சியின் சாரலில் ஒரு நாள் முழுக்க நனைய வேண்டும்
10) இந்தியா முழுக்க சுற்றவேண்டும்
11) பிள்ளைகள் மூவரையும் டாக்டர்கள் ஆக்க வேண்டும்
12) பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்ப
13) கணணி (கம்ப்யூட்டர் ) பயில
14)சொந்த மாக கனவு இல்லம்
15)சொந்த கார் அதுவும் நானே ஒட்டவேண்டும்
16) பங்கு சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள
17) மாதம் 6 இலக்கத்தில் வருமானம் தேட
18) என் பெயரனை Airtel சூப்பர் சிங்கரில் பாடவைக்க
19) ரோமாபுரியில் சென்று பழமை சின்னங்களை பார்க்க
20) switcher-land செல்ல
21) பேரன் பேத்தி களோடு disneyland செல்ல
22) ஒட்டகத்தின் மீது சவாரி செய்ய
23) பின்லாந்தில் பேத்தியுடன் பட்டம் பறக்க விட்டு விளையாட
24) Pisa
tower சாய்ந்த கோபுரத்தின் புல் வெளியில் படுத்துக்கொண்டே கோபுரத்தை ரசிக்க
25)பின்லாந்தில் பனியில் தன்னந் தனியாக வெகு தூரம் நடக்க
26) நண்பர்கள் கஷ்ட பட்டால் முடிந்த உதவி செய்ய
27) ஹெலிகாப்டரில் பயணம் செய்ய
28) நீச்சல் பழக
29) காஷ்மீர் படகு வீட்டில் இரண்டு நாள் தங்க
30) தாஜ்மஹால் பார்க்க
31) லண்டனில் ஒரு வாரம் தங்க
32) சிங்கப்பூரில் ஷாப்பிங் செய்ய
33) துபாய் நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் தங்க
34) யானை மீது சவாரி செய்ய
35) அமெரிக்காவில் பெயர்த்தி பரத நாட்டிய அரங்கேற்றம் பார்க்க
36) விமரிசையாக சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ள
37) மூட நம்பிக்கை களுக்கு ஆளாகாமல் இருக்க
38) பகுத்தறிவற்ற கூட்டத்திலிருந்து விலக
39) குல்மார்க் பனி மலை மீது ஏற
40) கனடா CN Towers மீது ஏறி பார்க்க
41) கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை தொட்டுப் பார்க்க
42)USA
Empire state கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பார்க்க
43) New york statue
of Liberty
சென்று பார்க்க
44) ஊட்டியில் பங்களா வாங்க
45)San Antonio
river walk செல்ல
46)sea world பார்க்க
47) HOT - Air பலூனில் உயரத்தில் பறந்திட
48)washington
Monument மீது ஏறிப் பார்க்க
49)white House tour சென்று பார்க்க
50)காசி யாத்திரை செல்ல
51) அலகபாத் திரிவேணி சங்கமத்தில் தீர்த்த மாட
52) கவிதைகள் இயற்ற
53) KFC சிக்கன் ருசித்து சாப்பிட
54) கடைசி வரை என் பற்கள் விழாமல் பாதுகாக்க
55) பொறுமை வளர்த்து கோபத்தை தவிர்க்க
56) மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக்கொள்ள
57) கடனே இல்லாமல் இருக்க (debt free )
58) கண் தானம் செய்ய
59) குறைந்தது 5 மொழி களாவது பேச வேண்டும்
60) குற்றால நீர்வீழ்ச்சியில் குளிக்க
61) colosseum in Rome
பார்க்க
62) டெல்லி காந்தி சமாதி பார்க்க
63) நேரத்தை நிர்வகிக்க பழக வேண்டும்
64)"NO " சொல்ல தெரிய வேண்டும்
65) warren Buffet ஐ சந்திக்க வேண்டும்
66) பங்கு சந்தையில் முதலீடு செய்ய
67)"Blog " ஆரம்பிக்க
68) Lake
Tahoo வில் விசை படகு ஓட்ட
69) திருவண்ணாமலை பௌர்ணமி கிரி வலம் வர
70) தினம் தினம் ஜக்கூஸி யில் அதிக நேரம் குளிக்க
71) திருச்சியில் 61"
TV யில் பிடித்தமான DVD பார்க்க
72) ஹாய்யாக ,அமெரிக்காவில் மகன் வீட்டு ஹோம் தியேட்டரில் படம் பார்க்க
73) பின்லாந்த் ஸ்ட்ராபரி தோட்டத்தில் சின்ன பேத்தியுடன்
மணிக்கணக்கில் பழம் பறிக்க
74) காலையில் பதநீர் குடிக்க , நுங்கு சாப்பிட ;
75) மாதம் ஒருமுறை Dominos Pisa / சிக்கன் burger சாப்பிட
76) ஞாயிற்று கிழமை நன்றாக தூங்க
77) பாணி பூரி சாப்பிட
78) நேற்று நடந்ததை மறந்து விட்டு இன்றைய நாளை புதிதாய் நினைக்க
79) எதிலும் ஏனோ தானோ என்றிருக்காமல்
,
வாழ்கையின் நோக்கத்தை புரிந்து செயல் பட
80) மற்றவர்களுக்கு
இறக்கப் பட
81) பெற்றோர் உறவினர் விமர்சனங்கள் கூட உங்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடும் ; எனவே உதட்டளவு உறவுகள் ஒதுக்கப் பட்டால் தவறில்லை என உணர
82) அடிக்கடி ஒய்வு எடுத்துக்கொள்ள
83) நோய் வராமலிருக்க முன் கூட்டியே மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்ள
84) வஞ்சிரம் மீனை நானே சமைத்து உண்ண !(ஏனென்றால் என் மனைவி சுத்த சைவம் !)
85) காரில் இயற்கை காட்சி சார்ந்த california scenic drive
மேற்கொள்ள
86) பின்லாந்த்
காடு களில் தன்னந் தனியாக வாக்கிங் போக , மற்றும் black berry சேகரிக்க
87) அமெரிக்க மால் களில் window shopping செய்ய
88) alps மலை ஏறும் துணிகர செயல் பற்றிய IMAX
படம் பார்க்க
89) பேரன்/பேத்தி Harvard
university டாக்டர் படிப்பு படிக்க
90) மினயொபோலிஸ்
lakes ஐ சுற்றி சுற்றி வாக்கிங் போக
91) மெரினா பீச்சில் மாலை நேரத்தை அனுபவிக்க
92) தேங்காய் மாங்காய் சுண்டல் மற்றும் பேல் பூரி சாப்பிட
93) வைதீஸ்வரன்
கோவில் கார்த்திகை அபிசேகம் பார்க்க
94) திருச்சி மலைக்கோட்டை உச்சியில் நின்று காற்று வாங்க
95) மனைவி மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு புத்தகம் படிக்க
96) மனைவிக்கு மல்லிகை பூ வாங்கிக் கொடுக்க
97) மனைவி கை சமையலை விரும்பி உண்ண
98) புது புது உடை உடுத்த
99) குளிர்சாதன
அறையில் தூங்க
100) உடைந்த உறவுகளை என்றாவது ஒட்டவைக்க
101) கடைசி வரை,நடை உடையாக வாழ்ந்து ( படுத்த படுக்கையாகக் கிடக்காமல்,) தூக்கத்திலேயே உயிர் நீக்க !!
இது போன்ற பட்டியலிட்டு எதுவும் நிறைவேறா விட்டால் அது என் தோல்வி அல்ல ! பட்டியலே போடாமல் இருந்தால் தான் அது என் தோல்வி !!
இது போல் நீங்களும் சாவதற்கு முன் செய்து முடிக்க விரும்பும் குறைந்தது 101 சின்ன சின்ன ஆசைகளை பட்டியலிடுங்கள் . ஆசைகள் தான் இலட்சியங்களின் அடித்தளம் . ஏன்? , இலட்சியம் என்பதே ஒரு வகை ஆசை தானே ! ஒரு மனிதன் துறவி யாக போக வேண்டுமென்றால் கூட , அப்படி துறவியாக போகவேண்டுமென்று ஆசைப்பட்டால் தான் துறவியாக போகமுடியும் !
65 வயது நிரம்பிய எனக்கு என் இலக்கு பட்டியலில் கிட்ட தட்ட 90% நிறைவேறி விட்டது என்றால் நம்புகிறீர்களா?! ஆம், நான் எப்போதுமே மற்றவர் களிலிருந்து சற்றே வித்தியாசமாக சிந்திக்க பழகியவன் .
Now , Get into action !
பட்டியல் தயாரித்து விட்டீர்களா? அடுத்து என்ன செய்வது ? அதை தினசரி உங்கள் பார்வையில் படும் இடத்தில் வையுங்கள் ! அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள் ! வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், அதை உங்கள் குடும்பத்தினர் ,
மற்றும் உற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !
நாளாக நாளாக ,இந்த உலகம் உங்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வீசும் !
அப்போது பட்டியலின் நீளம் கூடலாம் ; திசை மாறலாம், புது எண்ணங்கள் புது புது ஆசைகள் தோன்றட்டும் ! ஒரு போதும் பட்டியலின் அளவை குறைக்க நினைக்க வேண்டாமே, அன்பர்களே !
நம் முன்னாள் குடியரசு தலைவர் "இளைஞர்களே கனவு காணுங்கள் !" என்று சொன்னார் ; நான் உங்கள் ஆசை களை . பட்டியலிடுங்கள் என்கிறேன் !
No comments:
Post a Comment